“குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா, நண்பீஸ்-க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்’’ என்று த.வெ.க தலைவர் விஜய் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்திருந்தார் ,

தமிழ்நாட்டில் இதுவரை குறிப்பிட்ட சாதி, மதம், கட்சி, பாலினம் சார்ந்து இருந்த வாக்குவங்கிகளைத் தாண்டி, இந்த முறை ‘பெற்றோர் வாக்குவங்கி’ என்ற ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. தங்கள் வீட்டுப் பெரியவர்களை, விஜய்க்கு ஓட்டுப்போடச் சொல்லி குழந்தைகள் நச்சரித்த கதைகளை தமிழகம் முழுவதும் கேட்க முடிந்தது. அதற்கு முக்கியக் காரணம், “குட்டீஸ்களே... உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல... அதே மாதிரி இந்த `விஜய் மாமா’ ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை விசிலுக்கு ஓட்டுப்போட வைங்க” என்று இறுதிநாள் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் விஜய்.

அது மட்டுமல்ல, தேர்தல் முடிந்ததும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையிலும், குழந்தைகளுக்குத் தனியாக நன்றியும் தெரிவித்திருந்தார்.